அலங்காநல்லுாரில் சக்தி கிடா வெட்டி சிறப்பு பூஜை
ADDED :1995 days ago
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் முனியாண்டி சுவாமி, முத்தாலம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா நடந்தது. முதல் நாள் அம்மனுக்கு சக்தி கிடா வெட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து தரிசித்தனர். தீவட்டி பரிவாரங்களுடன் முனியாண்டி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலம் சென்றார். அம்மன் பூப்பல்லக்கில் பூஞ்சோலை சென்றார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.