ஈஸ்டர் பண்டிகை : ராமேஸ்வரம் சர்ச்சில் திருப்பலி பூஜை
ADDED :1721 days ago
ராமேஸ்வரம்: ஈஸ்டர் பண்டிகை யொட்டி ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள சர்ச்களில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. நேற்று இயேசு உயிர்த்து எழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் தேவசகாயம் சிறப்பு திருப்பலி பூஜை நடத்தினார். மேலும் தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள புனித குழந்தை இயேசு சர்ச், புனித தெரசாள் சர்ச், புனித ஆரோக்கிய மாதா சர்ச்களில் ஈஸ்டர் திருப்பலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று அருளாசி பெற்றனர்.