உத்தரகோசமங்கையில் அன்னதான மண்டபம்
ADDED :1747 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் புதிதாக அன்னதானக்கூடம் கட்டப்பட்டுள்ளது.முன்பு அன்னதான கூடம் பிரதோஷ நந்தி அருகில் இருந்தது. இதில் 50 பேர் அமர முடியும். இட நெருக்கடி ஏற்பட்டது. புதிதாக கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தில் 100 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மங்களேஸ்வரி அம்மன் ராஜகோபுரத்திற்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.