தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
ADDED :1738 days ago
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பிலவ தமிழ் புத்தாண்டு துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல் ஆஞ்சநேயர் சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சமுக விலகலை கடைபிடித்து வழிபட்டனர்.