சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா
ADDED :1735 days ago
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 14ல் துவங்கி 17 நாட்கள் நடக்கிறது. இதற்கான மூன்று மாத கொடியேற்றம் நடந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பூஜாரி சண்முகவேல் கொடியை சுமந்து நான்கு ரத வீதிகளுக்கு பதில் கோயில் வளாகத்தை மட்டும் சுற்றி வந்தார். மண்டக படிதாரர்கள், உபயதாரர்கள், போலீஸ் குடும்பத்தினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.