உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

 திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழா இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்களின்றி நேற்று துவங்கியது. அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபராதனை நடந்தது. தொடர்ந்து ரிஷப ேஹாமத்துடன் கொடியேற்றம் நடந்தது. இதன் பின் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவில் சுவாமி வீதியுலா கோயில் உட்பிரகாரத்தில் நடந்தது. பத்தாம் திருவிழாவான ஏப்.24 ம் தேதி திருக்கல்யாணம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !