உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் ராமானுஜரின் 1,004வது திருநட்சத்திர பூஜை

சேலத்தில் ராமானுஜரின் 1,004வது திருநட்சத்திர பூஜை

சேலம்: சேலத்தில், ராமானுஜரின் பிரமாண்ட சிலைக்கு நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராமானுஜரின், 1,004வது திருநட்சத்திரத்தையொட்டி, சேலம், எருமாபாளையத்தில் உள்ள, அவரது மணி மண்டபத்தில், நேற்று காலை விசேஷ திருமஞ்சனம், திருவாபரணம், ஆராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், ராமானுஜருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். சேலம் கடைவீதி லட்சுமண நாராயண பெருமாள், செவ்வாய்பேட்டை வெங்கடாஜலபதி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், ராமானுஜருக்கு நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !