பெண்களே ஜாக்கிரததை
ADDED :1690 days ago
‘ஹமாம்’ என்றால் ‘குளிக்கும் இடம்’. அரபு நாட்டில் பொது குளியல் இடங்களே கிடையாது. அங்கே கடும் தண்ணீர் பஞ்சம். பாரசீகம் உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் சென்றால், அங்குள்ள பொதுக்குளியல் இடங்களில் குளித்து வருவதுண்டு.
நாயகத்தின் மனைவி உம்மு ஸல்மாவைக் காண, சிரியா நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் வந்தனர். தங்கள் நாட்டிலுள்ள ‘கும்ஸ்’ என்ற ஊரிலுள்ள ஹமாம்களில், தாங்கள் நீராடியது பற்றித் தெரிவித்தனர். .
“என்ன! நீங்கள் பொதுவான இடத்திலா குளிக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
‘ஆம்.. அதிலென்ன தவறு’ என்று அந்தப் பெண்கள் கேட்டனர்.
‘‘தன் வீட்டையன்றி வேறு இடத்தில் தன் ஆடைகளைக் களைபவள் இறையருளை இழக்க நேரிடும்’’ என்றார்.