வைகையில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி: நேரடி ஒளிபரப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.27) நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் அழகர்கோவில் ஆடி வீதியில் இந்நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு செயற்கையாக வைகை ஆறு செட் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சவோ, திரி எடுக்கவோ அனுமதி இல்லை. தீர்த்தம், அர்ச்சனை, மரியாதை, மாலை சாற்றுதல் கிடையாது. நிகழ்ச்சிகளை எல்.இ.டி., திரை மூலம் கோயில் பகுதிகள், தல்லாகுளம், வண்டியூர் கோயில் முன் பக்தர்கள் காணலாம். தவிர www.tnhrce.gov.in,www.alagarkovil.org, youtube Arulmigu Kallalagar Thirukkoil, algarkoil, youtube temple live streaming, https://www.dinamalar.com/video_main.asp?news_id=2411&cat=live மூலமாகவும் காணலாம். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை கமிஷனர் அனிதா செய்து வருகின்றனர்.