மலர்களைப் படைத்து வேண்டினால் கல்யாண கனவு நனவாகும்!...
ADDED :1621 days ago
பெருமாள் கோயில்களில் குங்கும பிரசாதம் தரப்படும். ஆனால், அழகர்கோவிலில் கஸ்துாரி மஞ்சசளை பிரசாதமாக வழங்குகின்றனர். மஞ்சள் மங்கலத்தின் சின்னமாகும். இங்குள்ள கல்யாண சுந்தரவல்லித் தாயாரிடம் வேண்டினால் திருமணத்தடை நீங்கும். மணமானவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பதன் அடிப்படையில் மஞ்சள் வழங்கப்படுகிறது.
மூலவர் கள்ளழகரின் வலப்புறம் தனி சன்னிதியில் கல்யாண சுந்தரவல்லி தாயார் உள்ளார். மணமாகாத பெண்கள் இந்த தாயாரை ஏழுமுறை வலம் வந்து வாசனை மலர்களைப் படைத்து வேண்டினால் விரைவில் கல்யாண கனவு நனவாகும்.