சகுனம் பார்க்காதீர்
ADDED :1680 days ago
சிலர் ஜோதிடம், சகுனம் பார்ப்பதில் ஈடுபாடு காட்டுவர். இறை நம்பிக்கையுடன் செயல்படுவதை விட்டுவிட்டு இப்படி குறி, சகுனம் போன்ற மூடத்தனங்களை நம்பினால் பண இழப்பும், சிரமமும் ஏற்படும்.
“சகுனம், ஆந்தை சாஸ்திரம் பார்ப்பது கூடாது. நட்சத்திர சகுனம் பார்ப்பதும் நல்லதல்ல. பறவை சகுனம் பார்ப்பவன், பார்க்கக் கோருபவன், குறி பார்ப்பவன், குறி பார்க்க கோருபவன், சூனியக்காரன், சூனியம் பார்க்கக் கோருபவன், ஆகியோர் இறைநெறியை நிராகரித்தவர் ஆவர்’’
எந்த சூழலிலும் ‘‘இறைவா! உன்னையன்றி யாரும் எனக்கு நல்லதைக் கொண்டு வர முடியாது. தீங்கான காரியங்களைத் தடுக்கவும் முடியாது. எல்லாமே உன்னைக் கொண்டே நடக்கின்றன’’ என பிரார்த்திக்க வேண்டும்.