பழநியில் குருபூஜை
ADDED :1703 days ago
பழநி,: பழநி வடக்கு கிரி வீதியில் சட்டி சுவாமியின் ஜீவ சமாதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி, அனுஷ நட்சத்திரத்தில் குரு பூஜை நடைபெறும். இங்கு நேற்று 95 ஆவது ஆண்டு குருபூஜை நடந்தது. இதில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.