இலக்கியக்கழகம் சார்பில் சொற்பொழிவு
ADDED :1633 days ago
திருநெல்வேலி: பாளை., மாநிலத்தமிழ்ச்சங்கத்தில் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக்கழகம் சார்பில் சொற்பொழிவு நடந்தது. பேராசிரியர் பால் அரசு தலைமை வகித்தார். திருக்குறள் பிரபா இறைவாழ்த்து பாடினார். முகுந்தன் வரவேற்றார். பேராசிரியர் சாலை. இளந்திரையன் இலக்கியத் சொற்பொழிவு நடந்தது. 25 ஆண்டுகள் திருக்குறள் தொண்டு ஆற்றிய ராமசாமி, புலவர் செந்தில் நாயகத்திற்கு திருவள்ளுவர் விருது சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜேம்ஸ்ராஜ் பேசினார். திருக்குறள் முருகன் நன்றி கூறினார்.