கண் நிறைந்த கணவர் அமைய...
ADDED :1718 days ago
வேத வியாசரிடம் அர்ஜுனன் உபதேசம் பெற்ற ஸ்தோத்திரம் ‘லட்சுமி ஹ்ருதயம்’. இதை ஜபித்தால் மனதுக்கு பிடித்த மணவாழ்வு அமையும். இதை ஜபித்த கிருஷ்ணரின் தங்கையான சுபத்ரை, கண் நிறைந்த கணவராக அர்ஜுனனின் கரம் பற்றினாள்.
அந்த ஸ்லோகத்தின் பொருள் இது தான்.
‘‘தாமரைக் கண்களைக் கொண்ட மகாலட்சுமியே! தைரிய லட்சுமியாக வந்து காப்பவளே! நெற்றி திலகத்தில் வாழ்பவளே! குளத்தில் நீர் இல்லாவிட்டால் மீன்கள் வாழ முடியாதது போல, கருணை மிக்க உன் அருள் பார்வை இல்லாமல் என்னாலும் வாழ முடியாது. நீயே என் தாய் என்பதை நிரூபிக்க இப்போதே வந்து விடு. கேட்டதை வழங்கும் கற்பகம் போன்றவளே! தாய், தந்தை, குரு என எல்லாமாக இருந்து என்னைக் கரை சேர்ப்பாயாக’’