உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கு விஜயநாராயணம் கோயில் கொடை விழா துவக்கம்

வடக்கு விஜயநாராயணம் கோயில் கொடை விழா துவக்கம்

நான்குநேரி:வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோயில் கொடைவிழா நேற்று கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது.தென் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோயிலாகும். இக்கோயிலில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொடைவிழா நடப்பது வழக்கம். இக்கோயில் கொடைவிழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். புகழ்பெற்ற இக்கோயில் கொடை விழா நேற்று கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. விழாவில் கொடை விழா குழு தலைவர் நடராஜன் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். வரும் 21ம் தேதி கொடைவிழா ஆரம்பமாகிறது. அன்று மாலை மாக்காப்பு பூஜையுடன் கொடைவிழா நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. 22ம் தேதி காலையில் பால்குடம் எடுத்தல், மதியம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலையில் பாலாபிஷேகம், பின் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை படைப்பு பூஜை ஆகியன நடக்கிறது. பின் வாணவேடிக்கை நடக்கிறது.கொடைவிழாவை முன்னிட்டு நெல்லை, நான்குநேரி, திசையன்விளை, சாத்தான்குளம் போன்ற முக்கிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கொடைவிழாவில் குறவன், குறத்தி ஆட்டம், கரகாட்டம், கும்பாட்டம், நையாண்டி மேளம், வாடிபட்டி மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் இ.மா.இ. நடராஜன், ஆய்வாளர் கோமதி, செயல் அலுவலர் வள்ளி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !