உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெயிலுகந்தம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்

வெயிலுகந்தம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்

 விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவில் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

இக்கோயில் பொங்கல் விழா பக்தர்கள் அனுமதியின்றி மே 18 ல் கொடியேற்றுத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள்,கோயில் உள்ளே அம்மன் வலம் வருதல் நடந்தது. கயிறுக்குத்து, அக்னிசட்டி நாளான நேற்று ஹிந்து நாடார் தேவஸ்தானம் சார்பில் கோயிலுக்குள் பக்தர் ஒருவர் அக்னி சட்டி எடுத்து வர அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது . இன்று கோயில் உள் பிரகாரத்தில் அம்மன் வலம் வரும் வகையில் தேரோட்டம் நடக்கிறது. மே 29ல் மஞ்சள் நீராட்டுடன் கொடியிறக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !