ஆதரவற்றவர்களை தேடி உணவளிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்
ADDED :1563 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ஆதரவற்றவர்களை தேடிச்சென்று உணவு வழங்கி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் இப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற பலருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினர் உணவுகளை வழங்கி வருகின்றனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தினமும் ஆதரவற்றவர்களை தேடிச்சென்று உணவுகளை வழங்குகிறார்கள். அந்த அமைப்பை சேர்ந்த கார்த்திகேயன், செந்தில் கூறியதாவது, 4 ஆண்டுகளுக்கு முன்பு மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் உணவு வழங்கும் சேவையை துவக்கினோம். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு முதல் தொடர்ந்து ஆதரவற்ற அனைவருக்கும் முடிந்த வரையில் உணவுகளை வழங்குகிறோம், என்றனர்.