உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கோயில்களில் பிரதோஷ வழிபாடு: ஆன்லைனில் பக்தர்கள் தரிசனம்

சென்னை கோயில்களில் பிரதோஷ வழிபாடு: ஆன்லைனில் பக்தர்கள் தரிசனம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 4:30 மணிக்கு நந்தி அபிஷேகமும், அதை தொடர்ந்து பிரதோஷ நாயகர் உள்புறப்பாடும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை http://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற யூ-டியூப் சேனலில் கோயில் நிர்வாகம் நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

• திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு நந்தியம்பெருமான் அபிஷேகமும், தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நடைபெற்றது.

இந்த நிகழ்வை https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற யூ-டியூப் சேனல் மூலம் நேரலையில் ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

• திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 4:30 மணிக்கு நடக்கும் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சிகள் https://youtu.be/r-g-M6sG9LYஎன்ற யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் ஆன்லைனில் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !