திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1648 days ago
திருவையாறு: திருவையாறு, அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
திருவையாறு, அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் நேற்று(10ம் தேதி) வைகாசி அமாவாசையை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் அருள்பாலித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழாவில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.