உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குட்டம் அம்மன் கோயில் சிலை உடைப்பு

குட்டம் அம்மன் கோயில் சிலை உடைப்பு

 திசையன்விளை: குட்­டம் ஆனந்த வல்லி அம்­மன் கோயில் சிலை உடைக்கப்­பட்டுள்­ளது. 


குட்­டத்தில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி அம்­மன் கோயில் உள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அர்ச்­சகர் சுப்பிரமணி பூஜைக்காக கோயில் நடையை திறந்து வைத்து விட்டு, அரைமணி நேரம் கழித்து மீண்டும் பூஜை செய்வதற்காக ஆனந்தவல்லி அம்­மன் கோயில் கருவறைக்கு சென்ற போது அம்­மன் சிலையில் உள்ள கண்மலர் கீழே விழுந்தும், அம்மனின் சிலை கழுத்து பகுதி உடைபட்டும் இருந்துள்­ளது. இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து, நடந்த சம்­பவத்தை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்களுக்கு தெரிவித்தார். இது குறித்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் உவரி போலீசில் புகார் செய்யப்பட்­டது.  போலீசார் சிலையை பார்வையிட்டு, கைரேகைகளை பதிவு செய்தும், கோயில் அருகில் பொருத்தப்­பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளையும் ஆய்வு செய்தும், பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !