கிறிஸ்துவ போதகர்களுக்கு நிவாரண உதவி
ADDED :1778 days ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் கிறிஸ்துவ போதகர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.விழுப்புரம் பாண்டியன் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருநாவலுார் ஜோசப் கல்லுாரி மற்றும் கமலா கல்வியியல் கல்லுாரி செயலாளர் பிரபாகர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். இதில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புரத்தை சேர்ந்த 100 போதகர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப் பட்டது. மேலும், தமிழக அரசு போதகர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.அப்போது, போதகர்கள் சாலமன், ஜான்சன், நோவோ, இந்திய சுவிசேஷ திருச்சபை மறை மாவட்ட போதகர் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.