தினமலர் செய்தியால் வெயிலில் காய்ந்த தேருக்கு கூடாரம் அமைப்பு
ADDED :1634 days ago
அம்பாசமுத்திரம்: தினமலர் செய்தியால், கூடாரம் மற்றும் மேற்கூரைஅமைத்து தேரை பாதுகாக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறைதுவக்கியுள்ளது. அம்பாசமுத்திரத்தில், கடந்த ஏப். 13ம் தேதி நடக்க விருந்த காசிநாதசுவாமி கோயில் பங்குனி தேரோட்டத்திற்காக தேரின்கூடாரம், மேற்கூரை பிரிக்கப்பட்டு தேர்புனரமைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடக்கவில்லை. இருப்பினும், தேரைசுற்றி கூடாரம் அமைக்கப்படாததால், சுமார் 2 மாதமாகதேர்வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வந்தது. இச்செய்தி, நேற்றைய தினமலரில் வெளியானதையடுத்து, கோயில் நிர்வாகம் தேரைசுற்றி கம்பு கட்டி, தகரத்தால் கூடாரம் அமைக்கும் பணியை துவங்கியுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.