அண்ணாமலையார் கோயிலில் அருள்பாலிக்கும் உயரமான காலபைரவர்!
ADDED :1610 days ago
இந்தியாவில் உள்ள காலபைரவர் சிலைகளில் உயரமான சிலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ளே அமைந்துள்ளது பிரம்ம தீர்த்தம். அந்த தீர்த்த கரையில் அமைந்துள்ளது காலபைரவர் சன்னிதி. சிலை உயரம் சுமார் ஆறு அடி. ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலை. எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையை அணிந்தவாறு காட்சி தரும் காலபைரவரை பார்க்க பிரமிப்பாக இருக்கும். தலையில் பிறைச் சந்திரன் சூடி இருப்பார் காலபைரவர். திருஷ்டி நீங்க இங்குள்ள காலபைரவரிடம் வந்து வேண்டிக் கொள்வார்கள். பலவிதமான பயங்கள் தீரவும் இவரிடம் வேண்டிக் கொள்வார்கள். தேய்பிறை அஷ்டமி ஞாயிறு ராகு காலங்களில் இவரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.