பழநி திருஆவினன்குடி கோயிலில் கிருத்திகை வழிபாடு
ADDED :1599 days ago
பழநி : பழநி திருஆவினன்குடி கோயிலில் ஆனி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று ஆனி கிருத்திகையை முன்னிட்டு, முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் குழந்தைவேலாயுத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா விதிகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.