உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் திறப்பு

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் திறப்பு

 வடவள்ளி: மருதமலையில், இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் கோவில் திறந்த நிலையில், பக்தர்களின் வருகை குறைந்து இருந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக, கோவில்களில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த, 80 நாட்களுக்குப்பின், நேற்று மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, சந்தனம், குங்குமம், நெய், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிருமி நாசினி தெளித்து, வெப்பநிலை பரிசோதித்த பின், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, வழக்கமான கூட்டத்தை விடவும், குறைந்த அளவு பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்தனர். அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலும், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நேற்று நடந்தது. கோவிலில் குறைந்த பக்தர்களை காணப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !