கொரோனா ஒழிய கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1928 days ago
ஊதியூர்: கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒழிய வேண்டியும், உலக மக்கள் வளமுடன் வாழ வேண்டியும், ஊதியூரில் உள்ள பிருஹன் நாயகி உடனமர் கைலாசநாதர் கோவிலில்,1.10 லட்சம் பாசூபத அஸ்த்ர ஜெபம் நடந்தது. இரண்டாம் நாள் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் பாலதண்டபாணி குருக்கள், பாலகிருஷ்ண குருக்கள் ஆகியோர் தலைமையில், திருத்தணி ஸ்கந்த குரு வித்யாலயா மாணவர்கள் இதை நடத்தினர்.