தர்மவழியில் செலவிடு
வழிகாட்டுகிறார் சிவானந்தர்
* பத்தில் ஒரு பங்கு வருமானத்தை தர்மவழியில் செலவிடு.
* நம்மை விட்டு விலகாத தோழனாக கடவுள் இருக்கிறார்.
* வழிப்போக்கனைப் போல வாழ்ந்தால் ஆசைகள் குறையும்.
* ஆசைகளை குறைத்தால் கடவுளை அடையலாம்.
* பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். எதிரியையும் நேசி.
* பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தை தினமும் படி.
* தினமும் இரண்டு மணி நேரம் மவுனமாக இரு.
* எப்போதும் உண்மை பேசு.
* பிறரை புண்படுத்தாமல் அன்பு காட்டு.
* தேவையை குறை. திருப்தியாக இரு.
* தினமும் 45 நிமிடம் உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடு.
* தவறால் கிடைத்த அனுபவத்தால் உன்னை திருத்திக்கொள்.
* துாங்கும் முன்பும், எழுந்த பின்பும் கடவுளை நினை.
* எண்ணம், சொல், செயலில் எவருக்கும் துன்பம் செய்யாதே.
* அநியாய வழியில் கிடைத்த பணம், பொருளை ஏற்காதே.
* தினமும் அதிகாலையில் தியானம் செய்.
* பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி, சகிப்புத்தன்மையால் கோபத்தைக் கட்டுப்படுத்து.
* நேர்மையை உயிராக போற்று.