சக்தி தரும் சத்தியம்
ADDED :1662 days ago
எது பெரிய பாவம் என நாயகத்திடம் ஒருவர் கேட்டார்.
“உங்களை எது பயத்தில் தள்ளிவிடுகிறதோ அதைக் கைவிடுங்கள். பயத்திற்கு அப்பாற்பட்டதாக எது உள்ளதோ அதை மேற்கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் மனநிம்மதியும், மனநிறைவையும் தருவது சத்தியம். பொய்யோ பயத்திலும், உறுத்தலிலும்தான் தள்ளிவிடும்” என்றார்.
சக்தி தரும் சத்தியத்தை மட்டுமே பின்பற்றி நடப்போம்.