வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!
ADDED :1663 days ago
சிட்டுக்குருவியின் உருவம் சிறியது. ஆனால், அதனின் ஆற்றலோ பெரியது. ஒரு நொடிக்கு 75 தடவை தனது இறகுகளை அடித்துக் கொள்ளும். உயரத்தில் சிறகடிக்காமல் பறக்கவோ, குதித்துக் குதித்துச் செல்லவோ இயலாது.
நெருப்புக்கோழியோ அதிக எடையுடன் கூடிய, பறக்க இயலாத பறவை. உருவமும் பெரிது. ஆனாலும் வேகமாக ஓடக்கூடிய கால்களை பெற்றிருக்கிறது.
அதுபோல் ஒவ்வொருவருக்கும் பல்வேறு திறன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
‘‘ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் பெருமை பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களின் தலைமுறை அவரின் ஆசியை பெறும்’’
நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நற்செயல்களை செய்வோம்.