தவறை திருத்திக் கொள்வோம்
ADDED :1663 days ago
ராபின்சன் க்ருஸோ என்பவர் கப்பலை ஓட்டிச் செல்லும்போது, விபத்துக்குள்ளானது. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விபத்தால் இறந்தால் தன் மீதுள்ள வழக்கு குடும்பத்தை பாதிக்குமே என்று வேதனைப்பட்டார்.
அப்போது அவருக்கு ஒருவாசகம் தென்பட்டது. ‘ஆபத்துக்கு கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்’ என்பதுதான் அது. பலமுறை பார்த்ததது என்றாலும், அன்று அது புதிய நம்பிக்கையை கொடுத்தது.
உடனே அக்கப்பல் ஒரு தீவில் கரை ஒதுங்கியது. தன்னை காப்பாற்றிய அவருக்கு நன்றி கூறினார்.
நமது வாழ்விலும் ஆபத்து வரும். அப்போது நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றுதான். ஆண்டவர் நம்மை காப்பாற்றுவார் என்பதுதான். மேலும், அந்த ஆபத்திற்கு நம்மிடம் ஏதும் தவறுகள் உள்ளதா என்று ஆராய்ந்து அதை திருத்திக் கொள்ள வேண்டும்.