முனிவர்களுக்கு தரிசனம்
ADDED :1828 days ago
சிதம்பரத்தை நடராஜர் கோயில் என்று குறிப்பிட்டாலும் இங்குள்ள மூலவர் லிங்க விடிவில் ‘ஆதிமூலநாதர்’ என்னும் பெயருடன் வீற்றிருக்கிறார். கைலாயநாதரான சிவனின் நாட்டியத்தை பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், தில்லைவனமான இத்தலத்தில் ஆதிமூலநாதரை நோக்கி தவமிருந்தனர். வேண்டுதலை ஏற்ற சிவன் தைப்பூச நன்னாளில் உச்சிப்பொழுதில் ‘திரிசகஸ்ர முனிவர்கள்’ என்னும் 3000 அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார்.