உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் தமிழக ஆளுநர் தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் தமிழக ஆளுநர் தரிசனம்

சித்தூர் : ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரத்தில் உள்ள ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.....

ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி அம்மையார் களை தரிசனம் செய்வதற்காக இன்று நாகலாபுரம் மண்டலம் சுருட்டப்பள்ளி வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு கோயில் சம்பிரதாயத்துடன் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் . கோயில் அறங்காவலர் குழு தலைவர் முனிசேகர் ரெட்டி திருப்பதி வருவாய் அதிகாரி கனகநரசாரெட்டி, சித்தூர் கூடுதல் எஸ்பி மகேஷ் மற்றும் ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி ரவீந்திர ராஜு சுருட்டப்பள்ளி தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோ- பூஜை நடத்தி ஸ்ரீ சர்வ மங்கலா - சமேத ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் சாமியை தரிசனம் செய்தார் .முன்னதாக பிரதோஷ நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளை ஏற்பாடு செய்தனர் தொடர்ந்து  சுவாமி அம்மையார்களை தரிசனம் செய்தவருக்கு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசீர்வாதங்கள் செய்தனர். அதனை‌ தொடர்ந்து கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி சுவாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களை வழங்கியதோடு சாமி படத்தையும் வழங்கினார்.  பின்னர் ஆளுநர் நேற்று இரவு பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ் பவன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !