பணிவு தரும் உயர்வு
ADDED :1654 days ago
ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க புலியும், யானையும் வந்தன. யார் முதலில் குடிப்பது என்று சண்டையிட்டுக்கொண்டன. ரத்தம் கொட்டியநிலையில் இரண்டும் களைத்தன. அங்கு நின்று இருந்த கழுகுகளோ இன்று நமக்கு சரியான உணவு கிடைக்கும் என காத்திருந்தன.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மனிதர்களிடம் இல்லாததால்தான் சகோதரர்களாக இருக்க வேண்டியவர்கள் சண்டையிட்டுக்கொள்கின்றனர்.
பணிவும், விட்டுக்கொடுக்கும் பண்பும் இருந்தால் வாழ்வில் உயர்வு பெறலாம்.