உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திரு விழா

ஆதி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திரு விழா

 மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஆதி முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் மற்றும் தீமிதி திரு விழா நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை தென்பெண்ணையாற்றிலிருந்து சக்தி கரகம் மற்றும் தீச்செட்டி எடுத்து வரப்பட்டது. மதியம் 1:00 மணியளவில் சுவாமிக்கு சாகை வார்த்தல் நடந்தது.மாலை 7:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !