பரமக்குடி பெருமாள் கோயிலில் ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம்
ADDED :1636 days ago
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள் - ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம் நடந்தது.
இக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா ஜூலை 16ல் கொடியேற்றத்துடன் ஆடி நடக்கிறது. தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் அருள்பாலிக்கிறார். நேற்று காலை பெருமாள் யானை வாகனத்தில் அலங்காரமாகி, ஆண்டாள் நாச்சியாருடன் மாலை மாற்றும் வைபவம் நடந்தது.பின்னர் பக்தர்கள் திருமண வரம் வேண்டி மாலைகளை சுவாமிகளுக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தனர். பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.