குற்றாலம் கோயிலில் மூலிகை மருந்து தயாரிக்கும் பணி தாமதம்!
குற்றாலம்:குற்றாலம் கோயிலில் மூலிகை மருந்து தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுவருவதாக நகர பிஜேபி பொருளாளர் திருமுருகன் புகார் கூறியுள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:- குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகள் அனைத்தும் மூலிகை மருந்துகளால் தயாரிக்கப்பட்டு ஆகமவிதிமுறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் 48 வகையான நறுமண மூலிகைகளால் பூஜை வழிபாடுகள் நடந்துவருகிறது. சந்தனம், நல்லெண்ணெய், பசும்பால், உடன் 48 வகையான மூலிகை பொருட்களால் தயாரிக்கப்படும் மூலிகை மருந்தை சுவாமிக்கு தினமும் 100மி.லி வீதம் அபிஷேகம் செய்துவருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மூலிகை மருந்து தயாரிக்கும் நிகழ்ச்சி தொடங்கி 3மாதத்திற்குள் முடிவடையும். தற்போது மூலிகை மருந்து காலியாகிவிட்டதால் கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி 48வகையான மூலிகைகளுடன் நல்லெண்ணெய், பசும்பால் உடன் கூடிய மருந்து தயாரிக்கும்பணி துவங்கியது.ஏன் இந்த கோயிலுக்கு மட்டும் மூலிகை மருந்துகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பதற்கு ஒரு தனிக்கதையே உண்டு.சிவபெருமான்,பார்வதி திருமணம் இமயமலையில் நடந்தபோது வடதிசை தாழ்ந்தும் தென்திசை உயர்ந்தது. தென்திசையை சமப்படுத்துவதற்கு பொதிகை மலையடிவாரப்பகுதியான குற்றாலத்திற்கு அகத்தியர் வந்தார். குற்றாலநாதராக அருள்பாலித்துவந்த விஷ்ணுவை கடந்துசென்றார். சிவனடியாரான அகத்தியாரான அகத்தியரை கோயிலுக்குள் அனுமதிக்க விஷ்ணு பக்தர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் குற்றாலநாதராக காட்சியளித்த விஷ்ணுவின் தலைமீது கைவைத்து சிவனாக மாற்றிவிட்டார். அகஸ்தியர் கைபட்டு அழுத்தம் ஏற்பட்டதால் சிவனாக மாறிய குற்றாலநாதருக்கு தலையில் வலி ஏற்பட்டது. இந்த வழியை போக்க அகத்தியர் 48வகையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்தை குற்லநாதருக்கு அபிஷேகம் செய்துள்ளார். இதன்பின்வந்த முனிவர்களும் இப்பழகத்தை தொடரவே இப்பழக்கம் இன்று வரை தொடர்கிறது.சுத்தமான குளிர்ந்த நீரில் வெற்றிவேர் கலந்து கொதிக்கவைக்கப்படுகிறது. மூலிகைகள் கலக்கப்படுகிறது. இதன்பின் தொடர்ந்த அடுப்பு எரிந்து வரும் நிலையில் ஒரு மாதம் கழித்து பால், இளநீர், சேர்க்கப்படுகிறது. 70நாட்கள் கழித்து நல்லெண்ணெய் சேர்க்கப்படுகிறது. 90வது நாள் மூலிகை கலந்த தைலம் கிடைக்கிறது. இந்த மூலிகை தைலம்தான் குற்றாலநாதருக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு 20மி.லி எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இது பல்வேறு நோய்களை குணப்படுத்தக்கூடியது என்பது ஐதீகம்.தற்போது மூலிகை மருந்து தயாரிக்கும் பணி துவங்கி 127 நாட்கள் ஆகிறது. இன்றுவரை மூலிகை மருந்து தயாரிக்கும் பணி முடிந்தபாடில்லை. கோவில் நிர்வாகத்திடம் கேட்டால் போதுமான பொருட்கள் வாங்கித்தரமறுக்கிறார்கள் என கோவில் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றாம் சாட்டுகின்றனர்.இப்போது நறுமபொருட்கள் வாங்கி கொடுத்தால் இன்னும் 42 நாட்கள் ஆகும் அதன்பின்புதான் மருந்து காய்ச்சி முடிக்கமுடியும் என்கின்றனர். எனவே சுவாமிகஅகு அபிஷேகத்திற்குரிய மருந்தை தயாரிக்கும் பணியை விரைவில் துவங்காவிட்டால் பிஜேபியினரை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தப்போவதாக நகர பிஜேபி பொருளாளர் முருகன் தெரிவித்தார்.