உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு பவுர்ணமியை ஒட்டி பல கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்

குரு பவுர்ணமியை ஒட்டி பல கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்

 பெங்களூரு : குரு பவுர்ணமியை ஒட்டி, பெங்களூரு நகரின் பல கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக இருந்தது.

குறிப்பாக, கேம்பிரிட்ஜ் லே அவுட், மல்லேஸ்வரம், ஒயிட்பீல்டு, கன்டோன்மென்ட், ஜெ.பி.நகர் என பல பகுதிகளில் உள்ள சாய் பாபா கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. ஜெ.பி.நகரின் ஸ்ரீ சத்யசாய் கணபதி கோவிலில், கொரோனா மருந்துகளால், சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.நான்கு மாதங்களுக்கு பின், கோவில்களில் அதிக அளவில் பக்தர்களை காண முடிந்தது.கொரோனா அச்சத்தால் வெளியே செல்ல முடியாதவர்கள், வீடுகளிலேயே ஸ்ரீ தத்தாரேயா ஜபம் செய்தனர். இன்னும் சிலர் தங்களின் குருக்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !