கரூர் விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1549 days ago
கரூர் : ஆடி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கரூர் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர் தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விஸ்வகர்மா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகங்கள் மஞ்சள்,பால், இளநீர், விபூதி,சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.