இலவசம் வேண்டாம் சொல்கிறார் ஷீரடி பாபா
* இலவசம் வேண்டாம். உழைப்பே நிலைக்கும்.
* தாயை நம்பும் குழந்தையை போல, கடவுள் மீது நம்பிக்கை வை.
* ரகசியம் என்பதே உலகில் இல்லை. அனைத்தும் கடவுளின் ஆணையால் நடக்கிறது.
* உடம்பை புறக்கணிக்காதே.
* மற்றவர் வம்பு செய்தால் இடத்தை விட்டு விலகு.
* பெரியவர்கள், நல்லவர்கள், சாதுக்களிடம் பணிவாக நடந்து கொள்.
* அடக்கம் இல்லாதவனின் உள்ளத்தில் தீய ஆசைகள் பெருகும்.
* தாயன்புக்கு ஈடானது வேறில்லை.
* உலகம் முழுவதும் அன்பு அலைகள் பரவட்டும்.
* கடவுளை எப்போதும் நினை. துன்பம் வராது.
* நல்லவனாக வாழ்ந்தால் சொர்க்கத்தை அடையலாம்.
* பிறரை மகிழ்ச்சிபடுத்துவதே பெரும் புண்ணியம்.
* நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால் முயற்சியில் வெற்றி பெறலாம்.
* உன்னை புறக்கணிப்பவர் மீது வெறுப்பு கொள்ளாதே.
* இன்பம், துன்பத்தை சமமாக நினை.
* ஆடம்பரத்தை தவிர்த்து பிறருக்கு உதவுங்கள்.