பயணம் செல்ல தடையில்லை
ADDED :1640 days ago
அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை நாட்களில் பயணம் செல்லக் கூடாது என்பர். ஆனால் நடைமுறையில் நாள், நட்சத்திரம் பார்த்து யாரும் வெளியூர் புறப்படுவதில்லை. இந்நிலையில் எந்த நாளில் கிளம்பினாலும் பயணத்தை இனிதாக்க எளிய வழிபாடு ஒன்றுள்ளது. கிளம்புவதற்கு முன் விநாயகர் கோயிலில் தேங்காயை சிதறுகாயாக உடைத்து விட்டு, இரண்டு வாழைப் பழங்களை பசுமாட்டுக்கு கொடுத்தால் போதும். முயற்சியில் குறுக்கிடும் தடைகள் விலகவும் இதைச் செய்யலாம்.