கட்டுப்பாடு இல்லாதவர்
ADDED :1640 days ago
கோயில் கருவறையில் இருப்பவர் மூலவர். விழாக்காலத்தில் வீதியில் வலம் வருபவர் உற்ஸவர். இருவருக்கும் அர்ச்சனை, அபிஷேகம், பூஜைகள் தினமும் நடக்கும். விழா காலத்தில் உற்ஸவர் உலா வரும் போது, மூலவரின் சக்தி அனைத்தும் உற்ஸவரையே சேரும் என்பதால் மூலவரை தரிசிப்பது கூடாது. சிற்பமாக வடிக்காமல் சுயம்பு மூர்த்தியாக அதாவது தானாகத் தோன்றிய மூலவராக இருந்தால் இக்கட்டுப்பாடு பொருந்தாது.