உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ வைக்கும் வாராஹி

வாழ வைக்கும் வாராஹி


கிராமங்களில் சப்தமாதர் அல்லது ஏழுகன்னிகள் வழிபாடு சிறப்பாக நடக்கும். சப்த மாதர்களில் ஒருவராகத் திகழ்பவள் வராகி. பன்றி முகத்துடன் கைகளில் கலப்பை, உலக்கையுடன் இருக்கும் இவளே விவசாயத்தை வாழ வைப்பவள். பொதுவாக ஆனி, ஆடி மாதங்கள் விவசாயத்துக்கு உகந்தவை. இந்த மாதங்களில் தான் மழை பெய்து வயல் விதைப்புக்கு ஏற்றதாக இருக்கும். எனவே இந்தக் காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம் வாராஹியம்மன். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பெரிய கோயிலில் வாராஹியம்மன் சன்னதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆனி அமாவாசையை ஒட்டி ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி நடக்கும். அப்போது நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்குமத்தால் சிறப்பு அலங்காரம் செய்வர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !