மஞ்சப்பால் அபிஷேகம்
ADDED :1636 days ago
மழை தெய்வமான மாரியம்மனுக்கு ஆடிச்செவ்வாயன்று கஞ்சி, கூழ், படைத்து வழிபடுவர். ஆடிக்கூழ் வார்த்தால் அம்மனருளால்நாடு செழிக்க மழை பெய்யும். விரதமிருந்து பெண்கள் வேப்பிலை சேலை உடுத்திக்கொண்டு கோயிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், நே்ரத்திக்கடன் செலத்துவர். அம்மனுக்கு அவளின் வாகனமான சிங்கத்திற்கும் மஞ்சப்பால் அபிஷே கம் செயவர். மஞ்சள் பொடி, கலந்த தண்ணீருக்கு மஞ்சப்பால் என்பது பெயர். கன்னிப்பெண்கள் மஞ்சப்பால் அபிஷே கம் செய்ய அம்மன் மனம் குளிர்ந்து திருமணவரம் கொடுப்பாள். இன்று ஆடி செவ்வாயும், ஆடிப்பெருக்கும் சேர்ந்து வருவது இன்னும் சிறப்பு.