கண்டவராயன்பட்டியில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1582 days ago
கண்டவராயன்பட்டி: திருப்புத்தூர் ஒன்றியம் கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி கோவிலில் ஆடிவிழாவை முன்னிட்டு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இக்கோவிலில் முதன்முறையாக ஊஞ்சல் உற்சவத்தை நடப்பு காரியக்காரர் சுப.தே.சுப்ரமணியன் குடும்பத்தார் நடத்தினர். மாலையில் மூலவர் சுப்ரமணியர், வள்ளி தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளினர். டாக்டர் குமரப்பன் மல்லிகா தம்பதியர் ஊஞ்சல் உற்சவத்தை துவக்கினர். சிறப்பு அலங்கார ஊஞ்சல் வைபவத்தை நாட்டார், நகரத்தார் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.