நேர்த்திக்கடனை தாமதப்படுத்தினால், குழந்தைப்பேறு தடைபடுமா?
ADDED :1625 days ago
நம்மைத் தண்டிப்பதா கடவுளின் வேலை! நிச்சயம் குழந்தைப் பேறு தடைபடாது. செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை கோயிலுக்குச் சென்று செலு த்துங்கள். இயலா விட்டால், அதற்கான நேரம் வரும்வரை காத்திருக்கலாம். தவறில்லை. குழந்தைப்பேறு கிடைக்க பால கிருஷ்ணருக்கு காய்ச்சிய பாலை நைவேத்யம் செய்து, பெரியாழ் வாரின் இந்த பாசுரத்தை 12 முறை பாராயணம் செய்யுங்கள். நிச்சயம் சின்னகண்ணன் அருளால் மழலை வாய்க்கும். வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் துõவிடக்கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்று.