வந்தாள் மகாலட்சுமியே!
ADDED :1619 days ago
மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் மேருமலைக்கு வந்த போது கிளி முகம் கொண்ட சுகபிரம்ம முனிவர் அவர்களிடம் ஆசி பெற்றார். அப்போது முனிவர் ‘‘தாயே! மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தால் உன் அருளைப் பெற முடியும்?’’ எனக் கேட்டார். அதற்கு மகாலட்சுமி “‘‘ இனிமையாக பேசுதல், இருப்பதை பிறருக்கு பகிர்ந்து கொடுத்தல், சாந்தமுடன் பழகுதல், பணிவுடன் நடத்தல், பெண்களை மதித்தல், நல்லவர் உபதேசம் கேட்டல், மனம், மொழி, மெய்களால் துாய்மை காத்தல் ஆகிய பண்புகள் கொண்ட நல்லவர்களிடம் நிரந்தரமாக குடியிருப்பேன்’’ என்றாள். நல்லவன் வாழ்வான் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டுமோ!