27 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு மஹா கும்பாபிஷேகம்
ADDED :1506 days ago
ஊத்துக்கோட்டை : பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட, 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஊத்துக்கோட்டை வட்டாரம், பென்னலுார்பேட்டை அருகே, வெலமகண்டிகை கிராமத்தில் உள்ளது வீரஆஞ்சநேய சுவாமி கோவில். இக்கோவிலில், 37 அடி உயர ஆஞ்சநேய சுவாமி சிலை அமைக்கும் பணி நடந்தது. பக்தர்கள் பங்களிப்புடன் நடந்த சிலை செய்து முடித்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று காலை, 8:00 மணிக்கு சுவாமி சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.