உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் அதிகாரிகள் ஆய்வு

வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் அதிகாரிகள் ஆய்வு

 மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே உள்ள, வரலாற்று சிறப்புமிக்க கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவிலை சுற்றுலாத்தலமாக, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சோழ மன்னர்கள் காலத்தில், அமராவதி ஆற்றங்கரை பகுதியில், கற்றளி கோவில்கள் உருவாக்கப்பட்டன. தங்கள் எல்லைகளை வரையறுக்கவும், ஆன்மிகத்தை வளர்க்கவும் நதிகளின் கரையோரம் இது போல் கோவில்கள் மன்னர்களால் அமைக்கப்பட்டன.ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும், இன்றளவும் பல கோவில்கள் நல்ல நிலை யில் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கதாக கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலையின் சிறப்புகளை உணர்த்துவதோடு, அன்றைய வாழ்க்கை முறை குறித்தும், மன்னர்கள் வழங்கிய மானியங்கள், கோவில் நடை முறைகள் குறித்தும் கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன. இரண்டு கி.மீ., தொலைவிலுள்ள கொங்கணேஸ்வரர் கோவிலை இணைக்கும் சுரங்கவழிப் பாதை, இந்தக்கோவிலின் வரலாற்று சிறப்புகளில் ஒன்று. இந்தக் கோவிலை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என, பல ஆண்டு களாக பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற, வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை சுற்றுலாத் தலங்களாக மாற்ற, தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இக்கோவிலை ஆன்மிக சுற்றுலாத்தலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக மாவட்ட சுற்றுலா வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பிரசாந்த், மணிமுத்து மற்றும் கோவில் அலுவலர் விஜயசந்திரன் இந்தக்கோவிலை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !