உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சி

செல்லியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சி

 ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி செல்லியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 27ம் தேதி சக்தி கரகம் அழைத்தலுடன் நிகழ்ச்சி சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை கரையில் இருந்து, சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து நேற்று மதியம் 4:00 மணியளவில், பெருமாள் கோவில் தெரு சாவடியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !