உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அறநிலை துறை இணை ஆணையர் சாமி தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அறநிலை துறை இணை ஆணையர் சாமி தரிசனம்

காளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு பிராந்திய அறநிலை துறை இணை ஆணையர் (regional joint commissioner of endowment dept.) சந்திர சேகர் ஆசாத் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார் .அவருக்கு கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும்  குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ஆசாத் கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கியதோடு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !